2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்ளப்பு, கிரான் மகா வித்தியாலயத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் பி.ஜே.ஜெயவீரரட்னம் தலைமையில் நேற்று  நடைபெற்றது.

நவீன வசதிகள் கொண்ட இந்த ஆய்வுகூட நிர்மான பணிகளுக்காக 80 இலட்சம் ரூபா நிதி ஒருக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, கோறளைப் பற்று கோட்ட கல்வி அதிகாரி நா.குணலிங்கம், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், முறைசாராக்கல்வி பிரதிக்கல்விப் பணிபப்hளர் வ.சின்னத்தம்பி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியினால் இந்த பாடசாலை மஹிந்தோதய திட்டத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .