2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மொழி டிப்ளோமா கற்கைநெறியை பயின்ற பொலிஸாருக்கு பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழி பயிற்சி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 99 சகோதர மொழி பொலிஸார் நேற்று மாலை டிப்ளோமா பட்டதாரிகளாக வெளியேறினர்.

ஐந்து மாதங்கள் இப்பயிற்சி நெறி இடம்பெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மாவட்ட இராணுவ கட்டளை தளபதி பிரிகேடியர் கேணல் சுகத் திலகரட்ன, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்; அத்தியட்சகர் அஜந்த சமரகோன் உட்பட பல பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .