2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசாலை பைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, பாலமுனை பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.

முபீன் பௌண்டேஷன் நிறுவனம் இவர்களுக்கான பாடசாலை பைகளை நேற்று சனிக்கிழமை வழங்கிவைத்தது.

பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்; கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம், புதிய காத்தான்குடி சமுர்த்தி வலய முகாமையாளர் ஏ.எல்.சுல்மி, பாலமுனை அலிகார் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஜவாத், முபீன் பௌண்டேஷன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .