2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட தொழிற் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவம் இன்று  மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இத்தொழிற்பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த வைபவத்தில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தொழிற் பயிற்சியினுடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் எனும் செயற்திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகர் குமுதுனி றோசா, ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் இலங்கையிலுள்ள நிதி மற்றும் நிர்வாக பணிப்பாளர் வொப் பொஸ் பிளக், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன் உட்பட ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், அதன் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிநெறியில், மேசன் மற்றும் தச்சு போன்ற தொழில்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .