2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காலநிலை மாற்றம் தொடர்பிலான விசேட செயமர்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் காலநிலை மாற்றம் மற்றும் இசைவாக்கம் தொடர்பிலான விசேட செயலமர்வு ஒன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நேர்வே நாட்டின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமான யு.என்.ஹெபிடட் நிறுவனம் மற்றும் மொறட்டுவ பல்லைக்கழகம், மட்டக்களப்பு மாநகர சபை என்பன இணைந்து இச்செயமல்வை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் மேற்கொண்டுவரும் இலங்கை கரையோர நகர பகுதிகளில் கால நிலை மாற்றத்திற்கு மீள் தன்மை கொள்வதற்கான செயற் திட்டம் எனும் திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்த செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மொறட்டுவ பல்கலைக்கழக கட்டிட கலை பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் பி.கே.எஸ்.மஹாநாம, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் மற்றும் மட்டக்களப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் டேவிட், மட்டக்களப்பு வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் எம்.மாமங்கராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் கால நிலை மாற்றம் மற்றும் இசைவாக்கம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் மேம்படுத்துவதற்கான கண்காட்சி நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றதுடன் அவர்களுக்கான விரிவுரைகளும் நடைபெற்றன.

இதேவேளை, ஏற்கனவே இந்த செயற்திட்;டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த செயற் திட்டமானது மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை பிரிவுகளில் இடம்பெற்றுவருவதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .