2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுத்தோட்டச் செய்கைக்கான பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கைக்கான பயிர்கள், விதைகள், இயற்கை உரங்கள், பயிர் செய்வதற்குரிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையால், சங்கத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் வீட்டுத்தோட்டச் செயற்றிட்டத்தின் கீழ் நேற்று திங்கட்கிழமை இவை வழங்கப்பட்டன.

காந்திநகர்,  பாவற்கொடிச்சேனை, சின்னவத்தை, கொடுவாமடு, தாந்தாமலை ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கே வீட்டுத்தோட்ட செய்கைக்கான பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன், இக்கிராமங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் பயிர்ச்செய்கைக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர் த.வசந்தராஜா, கிளை நிறைவேற்று அதிகாரி வி.பிறேமகுமார், திட்ட உத்தியோகஸ்தர் எஸ்.யோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .