2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய பதாதை இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய பதாகை அவ்விடத்திலிருந்து இனந்தெரியாதோரல் அகற்றப்பட்டுள்ளது.

 ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பின் பல இடங்களிலும் நீடூழி வாழ்க என்ற வாசகம் அடங்கிய ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகிலும் நிறுவப்பட்டிருந்த பதாகையே இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .