2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சாதனையாளர் பாராட்டு விழா

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு சோட்டோ கான் கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சாதனையாளர் பாராட்டு விழா மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர  தேசிய பாடசாலை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி செயலாளர் கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர்; கலந்து கொண்டனர்.

மாகாண விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே துறையில் வெற்றி பெற்றவர்கள், தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,  பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்றவர்கள்,  தேசிய ரீதியில் கலை நிகழ்ச்சிகளில் பாராட்டுப் பெற்றவர்கள், சாரணிய ஜனாதிபதி விருது பெற்றவர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற சோட்டோகான் கராத்தே கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் கடந்து வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சாதனையாளர் விருது இவ்வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடிப் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி சாதனை படைத்த மதன் சிங் மற்றும் ரி.மதன் ஆகியோருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .