2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பால வீதியூடாக கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட டிரக்டர் வண்டி, டிரக்டர் பெட்டி மற்றும்  துவிச்சக்கர வண்டிகளை மீட்கும் பணி நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.

டிரக்டர் வண்டியொன்று 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில் வெள்ள நீரினால் அடித்துச்செல்லப்பட்டது.  சாரதி உட்பட 8 பேர் நீரில் தத்தளிததுக்கொண்டிருந்த நிலையில்  கடற்படையினரின் படகின்மூலமும்; சிறுவர் நிதியத்தின் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் இயந்திரப் படகின் மூலமும் மீட்கப்பட்டனர்.

தற்போது வெள்ளம் வடிந்துவரும் நிலையில் டிரக்டரை மீட்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டிரக்டரும் டிரக்ட பெட்டியும் 8 துவிச்சக்கர வண்டிகளும்  மீட்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .