2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

புதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆரம்பப் பாடசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தார்.

மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைய ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை  ஆரம்பிக்கும் அபிவிருத்திக்கான துரித வேலைத்திட்டத்தின் கீழ், ஆறுமுகத்தான் குடியிருப்பில் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவாக இப்பாடசாலை இயங்கவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பவளகாந்தன், ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம், எறாவூர்ப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .