2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சீலாமுனைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி தூபிக்கு மலர் தூவி அஞ்சலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}




(ரி.லோஹித்)

சுனாமி அனர்த்தத்தில் பலியான தமது உறவுகளை சீலாமுனை சமூக அபிவிருத்தி சபையும், சுனாமி அனர்த்தத்தில் பலியான உறவுகளின் உறவினர்களும் இன்று புதன்கிழமை மாலை சீலாமுனைச் சந்தியில் நினைவு கூர்ந்தனர்.

இதன் போது, சீலாமுனைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், சுடர்களையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஈகைச்சுடர் ஏற்றப்பட்ட பாடையினை சீலாமுனை ஆற்றில் விட்டனர்.

சீலாமுனை சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் பி.ரமணபால் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், சீலாமுனை சமூக அபிவிருத்தி சபையின் போசகர் இரா.கலைவாணன் (கண்ணன் வைத்தியர்), கிராம முக்கியஸ்தர்கள், ஆலய நிர்வாகிகள், யங் ஸ்ரார் விளையாட்டுக்கழக நிர்வாகிகள், பிரதேசப் பொது மக்களும் கலந்து கொண்டனர்.























































































  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X