2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா, ஜதுசன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை வெள்ளத்தினால் போரதீவுப்பற்று பிரதே செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு இன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவுத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், சமுகசேவை உத்தியோகஸ்தர், எஸ்.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
பாய், சறம், சாறி, போர்வை, சுகாதாரப்பொதி, நுளம்புவலை, போன்ற பல பொருட்கள் 110 குடும்பங்களைச் சேர்ந்த 300இற்கு மேற்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .