2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வயோதிபர் கொலை் சந்தேகத்தில் மகன் கைது

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனையில் இன்று அதிகாலை 58 வயதான தங்கராசா நாகலிங்கம் எனும் விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டவரின் மகன், வெருகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நீதிவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கறுக்காமுனையிலிருந்து கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நேற்று மாலை கொல்லன் குளத்திலுள்ள தமது வயலில் ஒன்றாக நெல் அறுவடை செய்துகொண்டிருந்ததாகவும் அதன் பின்னரே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .