2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் ஜனனதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார், ஜவீந்திரா


இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூறாவது ஜனனதின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மணிமண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கலந்துகொண்டார்.

பட்டிருப்புத் தொகுதியின் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், நூறாவது ஜனனதின நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், ஞாபகார்த்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .