2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் ஊக்குவிப்புக்கான கடனுதவி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தில் செயற்படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழியங்கும் ஈச்சந்தீவு, காந்திநகர், சின்னச்சிப்பிமடு, நல்லதண்ணியோடை, கன்னன்குடா ஆகிய கிராமங்களிலுள்ள 14 சுய உதவிக்குழுக்களின் 80  அங்கத்தவர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இவர்கள் தங்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களை மேற்கொள்வதற்கு கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. பயனாளியொருவருக்கு 8,000 ரூபா முதல் 20,000 ரூபா என்ற அடிப்படையில் இக்காசோலைகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் டயக்கோணியா சுவீடன் நிறுவகத்தின் நிதியுதவியில்
இக்கடனுதவிகள் வழங்கப்பட்டன.

ஈச்சந்தீவு பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இவர்களுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .