2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ பகுதியை யுனெப்ஸ் அதிகாரிகள் பார்வை

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளப்படவுள்ள பகுதியினை ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள் ஸ்தாபனமான யுனெப்ஸ் நிறுவன அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

யுனெப்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதம இணைப்பதிகாரி சீலியா மற்றும் அதன் சிரேஷ்ட பிரதம பொறியியலாளர் ஏ.சி.விக்ரமரட்ண ஆகியோர் இதனை பார்வையிட்டதுடன் திண்மக்கழிவு முகாமைத்துவம் மேற்கொள்வதற்கான ஆரம்ப வேலைகள் குறித்தும் காத்தான்குடி நகர சபை தலைவருடன் கலந்துரையாடினர்.

இதன்போது காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .