2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் தாமைரைக்கேணி ஷாஹிர் மௌலான வித்தியாலய ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் பாடசாலைக்கு அதிபர் தரத்திலான நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் பாடசாலையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ள இரண்டு
ஆசிரியர்களின் இடமாற்றத்தைச் ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த சுகயீன விடுமுறை போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையில் 17 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்ற போதிலும் 3 ஆசிரியர்கள் மாத்திரமே இன்று கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கென மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர்.

ஆசிரியர்களின் விடுமுறை காரணமாக பதில் கடமையாற்றுவதற்காக பட்டதாரி பயிலுநர்கள் மற்றும் வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலிருந்து மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு கற்பித்தல் சுமுகமாக இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .