2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் இரு இந்திய பிரஜைகள் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இந்திய பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேளாண்மை இயந்திரத்தில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரையும் இராணுவத்தினர் கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும் வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இலங்கையின் குடியகழ்வு விதிகளுக்கு முரணாக தொழிலில் ஈடுபட்டுவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .