2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வேத்துச்சேனை கிராமம் மீண்டும் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நவகிரிக் குளமும்  ஆண்டுலோயாக் குளமும் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேத்துச்சேனை கிராமம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன், வெள்ளம் காரணமாக வெல்லாவெளி - மண்டூர் வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உழவு இயந்திரத்தின் மூலம் மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இக்குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்நிலையி;ல், இன்று புதன்கிழமை வேத்துச்சேனை கிராமத்தினை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு இராணுவத்தினரும் உதவிவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .