2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லோஹித்

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.

வாகரை பகுதியில் ஒருவரும் மாங்கேணி பகுதியில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த மூவரும், அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக கைதுசெய்யப்படாமல் பொலிஸ் காவலரண்கள் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் குடும்பத்தினருக்கு இரசிதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்(ரி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டதாகவே இரசிதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ரசீதுகளில்  கொழும்பு முகவரியிடப்பட்டுள்ளது. ரசீதுகள் முற்றுமுழுதாக சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கைதுசெய்யப்பட்ட குடும்பத்தினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் மனித ரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .