2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஹலால் மாநாடு இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடியில் நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை நடைபெறவிருந்த ஹலால் மாநாடு பொலிஸாரின் தலையீட்டையடுத்து நிறுத்தப்பட்டது.

காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரின் ஏற்பாட்டில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஹலால் பிரச்சினை தொடர்பாக விளக்கமளிப்பதற்கான மாநாடு ஒன்று நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த மாநாடு நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அங்கு வந்த பொலிஸார் மாநாட்டை நடத்தவிடமால் தடைசெய்ததாக
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்தே இந்தமாநாடு இடை நிறுத்தப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .