2026 மே 04, திங்கட்கிழமை

பிடியரிசி போட்டு ஆன்மீகக் கல்வியூட்டும் கிராமம் ஏறாவூரிலேயே உள்ளது: சுபைர்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'ஏறாவூர், சதாம் ஹுஸைன் கிராமத்து மக்கள் அகதிகளாக வெளியேறி பல வருடங்களாக அத்தலைந்து திரிந்தார்கள். நான் பொலிஸ் உத்தியோகஸ்தராக இருந்த போது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக இங்கு வரும் வேளையில் எத்தனையோ தடவைகள் எம்மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன' என்று முன்னாள் மாகாண சபையின் சுகாதார அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர்.

'இந்தக் கிராமத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தமது பிள்ளைகளுக்கு ஆன்மீகக் கல்வியை ஊட்டுவதற்காக பிடியரிசி போட்டு அதனை மத்ரசாவுக்குச் சேர்ப்பித்து கல்வி கற்பிக்கிறார்கள்.

கடந்த கால ஆயுத வன்முறைகளால் ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமம் 150 பேரை இழந்திருந்தது. இந்தக் கிராமம் முற்றுமுழுவதுமாகப் பாதிக்கப்பட்டு இங்கு வந்து எட்டிக் கூடப்பார்க்க முடியாத நிலையிருந்தது' என்றும் அவர் கூறினார்.

ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் பைஸானுல் மதீனா அறபிக் கல்லூரியில் தங்கி கல்வி கற்கும் தூர இடத்து மாணவர்களுக்கு கொடை வள்ளல்களால் படுக்கை மெத்தைகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி இப்றாஹிம் அப்துல் றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் கொழும்பிலுள்ள வர்த்தகப் பிரமுகர்களால் நூறு கட்டில், மெத்தைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .