2026 மே 04, திங்கட்கிழமை

புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்
   
சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா  இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியா, தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வெற்றியப்பன் கார்த்திகேயன் (வயது 27) என்பவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவருடைய விஸா நேற்று செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மேற்படி இந்திய பிரஜை கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்; கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 23 இந்திய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 9 பெண்களும் அடங்குகின்றனர். களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  களுவாஞ்சிக்குடியில் 17 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் இந்த வருடத்தில் இதுவரையில்  7 இந்திய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இதற்கு முன்னர் 2 தடவைகள் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இவ்வாறான வியாபாரிகளிடமிருந்து 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .