2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எஸ்.வதனகுமார்

மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தாறுமூலை,  மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் காயமடைந்தவர்களாவர்.

காயமடைந்தவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு மேலதிக சிகிற்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி கொம்மாதுறை இராணுவ முகாம் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்ட வேளையில் வந்தாறுமூலைப் பிரதேசத்திலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸூடன் மோதுண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .