2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை, பலாச்சோலை – கலைமகள் வீதியில் வசிக்கும் தருமரெட்ணம் ஜெயரூபன் (வயது 16) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை பகுதியிலேயே இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் தங்களது கிராமத்திற்கு ஊடாகச் செல்லும் 33,000  வோல்ரேஜ் கொண்ட அதியுயர் மின்னழுத்தம் உடைய மின்சாரக் கோபுரத்தில் ஏறுவது வழமையாகும்.

அவ்வாறே கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி கோபுரத்தில் ஏறிய இந்த இளைஞர் சறுக்கி விழுந்தபோது மின்கம்பியை பற்றிப் பிடித்துள்ளதாகவும் இந்த நிலையிலேயே இவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு  உயிரிழந்துள்ளார். 

இந்தக் கோபுரத்தைச் சுற்றி முட்கம்பி வேலியும் அபாய எச்சரிக்கை அறிவித்தல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .