2026 மே 04, திங்கட்கிழமை

ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத பொருட்களை உண்ணக்கூடாது: றம்ழான்

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத எந்தப் பொருட்களையும் முஸ்லிம்கள் கொள்வனவு செய்யவோ உண்ணவோ கூடாது என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடாக அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஹலால் உணவு என்பது தனியே முஸ்லிம்களுக்குறியது. இதனை எந்தவொரு சந்தர்பத்திலும் வேறு மதத்தவர்கள் உண்ன வேண்டும் என முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதேபோன்று ஹலால் இல்லாத எந்தவொரு உணவுப் பண்டங்களையும் முஸ்லிம்கள் உண்ன வேண்டும் என வேறு எந்த மதத்தவர்களும் கட்டாயப்படுத்துவதை அங்கீகரிக்கவும் முடியாது.   

இலங்கையில் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளை முஸ்லிம்கள் உண்னுவதாக இருந்தால் அதில் ஹலால் முறை பேணப்பட வேண்டும் என்றும் அவ்வாறு ஹலால் உணவாக தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இதன் நோக்கம் முஸ்லிம்களை புனித இஸ்லாமிய மத அடிப்படையில் வழிநடத்துவதற்கே அன்றி சிங்கள சமூகத்தினரும் ஹலால் உணவை உண்ன கட்டாயப்படுத்ததுவதற்கல்ல.

இதனை குறித்த மதவெறி பிடித்தவர்கள் நன்கு அறிந்து இருந்த போதிலும் திட்டமிட்ட அடிப்படையில் ஹலால் சான்றிதழ்களை தடை செய்யக்கோரி பகிரங்கமாக ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் காவியுடையுடன் ஈடுபட்டு பாரிய நெருக்கடிகளை முஸ்லிம்களுக்கும் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் அகில இலங்கை ஜமய்யத்துல் உலமா சபைக்கும் ஏற்படுத்தி வருவதோடு ஹலால் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பௌத்த மத வெறிபிடித்தவர்களான பொதுபலசேனாவும் ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்து முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமைகளுக்கு குந்தகம் விளைவித்து வருவதுடன் புனித இஸ்லாம் மதத்தை பின்பற்றவும் பல்வேறு தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

அத்தோடு ஒரு முஸ்லிம் உணவு உண்னுகின்ற போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படையான ஹலால் விடயத்தில் இருந்து முஸ்லிம்களை திசை திருப்பி ஹராமான உணவு வகைகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களை உணணவைத்து இஸ்லாமிய மதத்திலிருந்து தூரமாக்கின்ற விடயத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஒரு சில உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்த மதவாதிகளின் அச்சுறுத்தல்;களுக்கு அஞ்சி தாங்கள்  பொற்றுக் கொண்டுள்ள ஹலால் சான்றிதழ்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு ஹலால் சான்றிதழ்களை இரத்துச் செய்துள்ள தயாரிப்புக்களையும் ஏனைய புதிய தயாரிப்புக்களையும் ஒருபோதும் முஸ்லிம்கள் கொள்வனவு செய்யவோ அல்லது உண்ணவோ கூடாது.

அதேபோன்று முஸ்லிம் வர்தகர்கள் ஹலால் முத்திரை பொறிக்கப்படாத எந்தவொரு தயாரிப்புக்களையும் கொள்முதல் செய்வதையும் விற்பனை செய்வதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

  Comments - 0

  • aj Sunday, 24 February 2013 11:14 AM

    இவரின் அண்மைக்கால பேச்சி கடும் மதவாதம் மற்றும் இனவாதம்.
    பிரச்சினையை இவர்களே இன்று உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.
    அதன் வெளிப்பாடே இது.

    Reply : 0       0

    m.i.rillan Sunday, 24 February 2013 01:11 PM

    இதையே மற்றைய மதத்தவர்களை கடைபிடித்தால் முஸ்ஸிம் வியாபாரிகளின் நிலைமை என்னவாகும்..? கொஞ்சமாவது யோசித்து கதையுங்கள்...

    Reply : 0       0

    OFNAA Sunday, 24 February 2013 05:19 PM

    முஸ்லிம்கள் நீங்கள் உங்கள் மார்க்கம் சொல்வது போல் வாழுங்கள் என்று சொல்வது இனவாதமா!!! ஆச்சரியமாக இருக்கு!!! மார்கத்தைப்பற்றி, ஒரு மதத்தினரைப் பற்றிப் பேசினால் அது இனவாதம். எங்கள் மார்க்கம் கூறியுள்ள காரியங்களை கடைப்பிடித்து வாழுமாறு மக்களுக்கு உணர்த்துவது விபரமறிந்த ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். நாங்கள் எங்கள் உயிரை விடவும் மேலாக எங்கள் மார்க்கத்தைத்தான் மதிக்கிறோம். மார்க்கம்மில்லாது நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை.

    Reply : 0       0

    OFNAA Sunday, 24 February 2013 05:25 PM

    முஸ்லிம் வியாபாரிகளின் வியாபாரம் ஒரு போதும் நஸ்டமடையாது. ஏனெனில் அவர்கள் ஏக இறைவனை முற்றிலும் நம்பியவர்கள். அல்லாஹ்வை நம்பியோன் எவரும் நஸ்டமடைவதில்லை. அல்லாஹ்வுக்காக ஒன்றை விட்டால் அதற்குப் பகரமாக அல்லாஹ் வேறு வழியைத் திறந்து விடுவான். இதுதான் முஸ்லிம்களது நம்பிக்கை. நீங்கள் கவலைப்படத் தேவையில்லை முடிந்தால் மாற்று மதத்தினரையும் இது போன்று செய்து பார்க்கச் சொல்லுங்கள்.

    Reply : 0       0

    Mutabi3 Sunday, 24 February 2013 05:56 PM

    1- முஸ்லிம் எப்போதும் மதவாதியாகவே இருக்க வேண்டும். அதில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை.
    2- முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையில் நடக்கும் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் அவர்களது வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானது.
    “ வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். “ (அத் தவ்பா : 28)

    Reply : 0       0

    MADURANKULIKURANKAAR Sunday, 24 February 2013 09:21 PM

    அப்படியென்றால் நீங்கல் எல்லோரும் என்ன சொல்ல வருகிறீர்கள். ஹலால் உணவு சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? எதையாவது சொல்லி தொலைங்கப்பா?

    Reply : 0       0

    Rahmath ali Monday, 25 February 2013 04:08 AM

    இதில மட்டும் ஹலால் பேசுங்க, அரசியல் செய்வது மட்டும் வெறும் ஹராமதான் உங்கட பேச்செல்லாம் கொண்டுபோய் குப்பையிலே போடுங்க!

    Reply : 0       0

    Basit Ali Monday, 25 February 2013 06:07 AM

    நீங்கள் ஹலால் என்று கண்டதை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனையவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதற்குப்போய் ஏன் அடித்துக்கொள்கிறீர்கள்? ஹலால், ஹறாம் என்பது சாப்பாட்டில் மட்டும்தான் இருப்பதாய் இவர்களின் நினைப்பு. இவர்களுக்கு சாராயம் அருந்துவது பற்றி பிரச்சினை இல்லை, அதன் போது கடித்துக்கொள்ளும் இறைச்சி ஹலாலாய் இருக்க வேண்டுமாம். வங்கிகளில் சேமிப்புக்கணக்கிலிருந்து வரும் வட்டியை விட ஹலால் இல்லாத உணவு இறைவனால் மன்னிக்கப்படாத பாவமல்ல என்பது எத்தனை முஸ்லிம்களுக்கத்தெரியும்?

    Reply : 0       0

    Mohammed Hiraz Monday, 25 February 2013 06:25 AM

    அப்படி கடைபிடித்தால் நஸ்டம் அடைவது அவர்களே என்பது அவர்களுக்கு நன்கு தெரியுமே??? வியாபாரிகளை பயறும் பருப்பும் நெத்தலியும் நெய்யும் கீரையையுமா விக்க சொல்கிறீர்கள்???

    Reply : 0       0

    Mohammed Hiraz Monday, 25 February 2013 06:26 AM

    ஆமா உங்கட பேச்சில மட்டும் பொதுவாதம் தாண்டவமாடுதாக்கும்??? பின்னால இருந்து கூத்துபாக்கிறதுகென்டே காத்துட்டு இருக்கும் உங்கள போல ஜென்மங்களால்தான் இந்த நாட்டிற்கே இந்த கேடு???

    Reply : 0       0

    Mohammed Hiraz Monday, 25 February 2013 04:46 PM

    அப்படி மன்னிக்கபடும் என்று எங்கே இருக்கிறது???

    Reply : 0       0

    மனிதன் Monday, 25 February 2013 06:12 PM

    AJ அடுத்தவன் பிரச்சினையில் இடை புகுந்து கருத்தென்ற பெயரில் வஞ்சனை செய்கின்றாய். உனக்கேட்பட்டதை நினைத்துப்பார். திருந்தி உரிமைக்காக ஒன்றுபடு. உண்மைக்காக தோல்கோடு! இழந்தது போதும் இந்த நாடு.

    Reply : 0       0

    Suren Tuesday, 26 February 2013 02:18 AM

    ஹராமான உணவுகளை தவறுதலாக அல்லது தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டால் அதை இறைவன் மன்னித்து விடுவான். ஆனால் மக்கள் கொடுக்கும் அதிகாரம் எனும் அமானிதத்தை பயன்படுத்தி, அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழலும் சுரண்டலும் செய்வதை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்பதனை இவர் போன்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைக்கும் அங்காடி வியாபாரிகளிடம் எப்படி அநியாயமாக இலஞ்சம் பெறப்பட்டது என்பது ஆதார பூர்வமாக உள்ளது. அப்படி ஹராமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்காத வரை இறைவனின் மன்னிப்பே கிடையாது என்பதனை இவர் முதலில் நினைவில் கொள்ளட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .