2026 மே 04, திங்கட்கிழமை

தொழில் துறைத் திணைக்களத்தினால் சுய தொழில் ஊக்குவிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட அமைதிச் சூழலையடுத்து படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி உள்ள யுவதிகளின் நன்மை கருதி கிழக்கு மாகாண தொழில் துறைத் திணைக்களம் சுய தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தும்பு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றினை இந்த  திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

சுமார் ஆறு மாத காலங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் தும்பு பொருட்கள் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று வாழைச்சேனை பகுதியில் நடைபெற்று வருகின்றது.

கிழக்கு மாகாண தொழில் துறைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த பயிற்சியின் மூலம் இந்த பிராந்திய யுவதிகள் பெரிதும் நன்மையடைகின்றனர்.                                               




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .