2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் - பிரதி பொலிஸ் மா அதிபரின் மகன்களுக்கிடையில் கைகலப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனுக்கும் இடையில் கைகலப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தக் கைகலப்பின்போது காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடாவிலேயே இருவருக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மகனுக்கும் இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மகனான அசேல வைத்தியலங்காரவே காயமடைந்துள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாசிக்குடாவில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு பிரிவினர் வீடியோ படம் எடுத்ததனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • jameelஓட்டமாவடி Monday, 25 February 2013 09:44 AM

    அமைச்சர்ட மகனிடம் துப்பாக்கி இல்லாமல் போனது அடிபட்டவரின் அதிர்ஷ்டமே..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .