2026 மே 04, திங்கட்கிழமை

ஊஞ்சல் சீலை கழுத்தில் இறுகி சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸரீபா

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் அதன் சீலை கழுத்தில் இறுக்கியதால் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜா சவுமியா (வயது 12 ) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07இல் கல்வி கற்கின்றார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்திலேயே நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது ஊஞ்சலுக்காக கட்டப்பட்டிருந்த சீலை கழுத்தில் இறுக்கியதால் இவர் உயிரிழந்;துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர் தனியாக விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .