2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் மாயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்,--ஜதுசன்

மட்டக்களப்பு, பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருமண்வெளியை சேர்ந்த முருகேசப்பிள்ளை (வயது 56) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த ஆற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீன்பிடித்துக்கொண்டிருந்த இவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .