2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கிரான் - சந்திவெளி ஊடாக பாதை போக்குரவத்துச் சேவை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் - சந்திவெளி ஊடான திகிலிவெட்டை கிராமம் உட்பட பல கிராமங்களின் போக்குவரத்து வசதி கருதி பாதை போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டு  நடைபெற்றுவருகின்றது.

வாழைச்சேனை பிரதேசசபை பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டை, பேரலாவெளி, குடும்பிமலை, ஈரகுளம், பெண்டுகள்சேனை போன்ற கிராமங்களுக்கு ஒரேயொரு தரைவழிப் பாதையே காணப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இந்தப் பாதை ஊடான போக்குவரத்து தடைப்படுவதால் இந்தக் கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு கிரான் சந்திவெளிக் கிராமத்தின் ஊடாக பாதைச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியால் இந்த பாதைச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படிக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து வசதி கருதியும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் நன்மை கருதியும் வாழைச்சேனை பிரதேசசபையின் மேற்பார்வையில் இந்தப்; பாதைச் சேவை இடம்பெற்று வருகின்றது.

மாணவர்கள் மற்றும் அங்கவீனர்கள் இந்த பாதைச் சேவையில் பயணிப்பதற்கு முற்றிலும் இலவசமாகும்.  ஏனையவர்களுக்கு 10 ரூபா பெறப்படுவதாகவும் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உதய ஜீவதாஸ் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .