2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.அனுருத்தன்


தேசத்திற்க்கு மகுடம் நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களில் கடந்த இரண்டு வாரங்களாக விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன வருகின்றன. 

இதன் இறுதி நாள் நிகழ்வு செவ்வாய் கிழமை கல்குடா, வாழைச்சேனை, மற்றும் வாகரை போன்ற பொலிஸ் பிரிவுகளில் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

இதன்போது கல்வி, சுகாதாரம்,விளையாட்டு, கலை கலாச்சாரம், போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது. பிரதேச பாடசலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளின் போது வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் விழையாட்டு கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்க்ப்பட்டது.

இவ் நிகழ்வுகளுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ச்சகர் அஜந்த சமரக்கோன், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் லால் செனவிரட்ன, கல்குடா, வாழைச்சேனை மற்றும் வாகரை பொலிஸ் நிலைய அதிகாரிகலான பி.கே.சமரசிங்க, புஸ்ப்பகுமார, பாலித்த ஜெயரட்ன ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .