2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வவுணதீவு பொலிஸ் நடமாடும் சேவை ஊடாக சிரமதான அபிவிருத்திப் பணி முன்னெடுப்பு

Kanagaraj   / 2013 மார்ச் 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே.எஸ்.வதனகுமார்

வவுணதீவுப் பொலிஸ் நிலயத்தின் 21 நாள் விசேட நடமாடும் சேவையினுடாக 7இலட்சத்து 6750ரூபா பெறுமதியான சிரமதான அபிவிருத்திப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் பொலிஸ் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும் 21 நாள் விசேட பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது.

வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவையின் ஊடாக சேதமடைந்த வீதிகள் விளையாட்டு மைதானங்கள் சிரமதானத்தினுடாக திருத்தப்பட்டதுடன் பொது  இடங்களிலும் பல்வேறு சிரமதானப் பணிகள் பொலிஸாரினால் பொது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

இதே வேளை இவ் 21 நாட்களிலும் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றது.பாடசாலைமட்டத்தில் விளையாட்டு மற்றும் கலாசாரப் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் விளையாட்டுக் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டிகளும் இரத்ததான நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தின் 21 நாள் நடமாடும் சேவை கடந்த புதன் கிழமை நிறைவு பெற்றதுடன் இறுதி நிகழ்வு மட்ஃகன்னன்குடா மகாவித்தியாலய மண்டபத்தில் வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெனாண்டோ தலைமையில் இடம்பெற்றது.,

இந் நிகழ்வில்  ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோன்;,பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா ,வவுணதீவுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ராஜ் பாவு,பிரதேச சபைத் தவிசாளர் கா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன் போது பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்ற போட்டிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .