2026 மே 04, திங்கட்கிழமை

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவி

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எல்.தேவ அதிரன்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் வாகரைப் பிரதேசத்தின் இரு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரால் வழங்கப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் கனடா நாட்டின் தொண்டர் பாலாவின் அன்பளிப்புக்கு அமைய  இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழும்பும் முகமாக சுயதொழில் நடவடிக்கைக்காக இந்த இரண்டு தையல் இயந்திரங்களும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனால் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .