2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எம்.எஸ்.புஸ்பகுமார மற்றும் முறைப்பாட்டுப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.மாயா ரன்ஞன் ஆகியோரின் தலைமையின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, காவத்தமுனை போன்ற பகுதிகளில் அமையப்பெற்றுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்குள் புகுந்து நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றினை கொள்ளையடித்து வந்துள்ளதாகவும் இவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்று வந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொது மக்களால் வாழைச்சேனை மற்றும் கல்குடாப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஏற்கனவே ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதி மன்றின் உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பொலிஸார் இவர் தொடர்பாக மேற்கொண்ட விசாரனைகளின் பிரகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை இக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .