2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எல்.தேவ அதிரன்


வன்முறையற்ற இளைஞர் யுவதிகளை உருவாக்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு எகெட் அமைப்பின் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கரித்தாஸ்- எகெட் இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்வில், எகெட் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.ஓ.ஜெயானந்தம், கண்டி எகெட் கரித்தாஸ் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சஞ்சஜ் காந்தி, கொழும்பு கரித்தாஸ் செடக் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.தெய்வேந்திரன், சுவிஸ் கரித்தாஸ் அமைப்பின் பிரதி நிதிகளான ருசானா, றெஜினா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில், இளைஞர் யுவதிகளிடையே இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாக மும் மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். அத்துடன் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதன் போது நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இரத்தங்களை வழங்கினர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் இரத்தங்களைப் பெற்றுக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .