2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சோதிடம் சொல்லிப் பிழைப்பு நடத்திய இரு இந்தியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம்

A.P.Mathan   / 2013 மார்ச் 02 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் சோதிடம் கூறிப் பிழைப்பு நடத்திய இரு இந்திய தமிழ் நாட்டுப் பிரஜைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியுமாகிய காளிமுத்து வயது 47 மற்றும் அவரது மனைவி கதிராயி வயது 43 ஆகியோருக்கே இந்த அபராதத் தொகையைச் செலுத்துமாறு சுற்றுலா நீதிமன்றம் கட்டளையிட்டது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்களைக் கைதுசெய்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை ஆஜர் செய்தபோது நீதிபதி இந்த அபராதத் தொகையை விதித்தார். அத்துடன் சுற்றுலா விசாவில் வந்து தொழில் செய்யக்கூடாது என்றும் அவர்களை எச்சரித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .