2026 மே 04, திங்கட்கிழமை

ஐயங்கேணிப் பாடசாலைக்குச் சுற்றுமதில்

Kanagaraj   / 2013 மார்ச் 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

































-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் -ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி .ந்த அடிக்கல்லை கடந்த வெள்ளிக்கிழமை நாட்டி வைத்தார்.
பாடசாலை அதிபர் எஸ்.ஜெயராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதலாம் தரத்திலிருந்து சாதாரண தரம் வரை உள்ள வகுப்புக்களில் சுமார் 500 மாணவர்களைக் உள்ளடக்கிய இந்தப் பாடசாலை இதுவரை காலமும் சுற்று மதில் இல்லாத பெருங்குறையோடு இயங்கி வந்ததாக பாடசாலை அதிபர் எஸ்.ஜெயராஜா நிகழ்வில் குறிப்பிட்டார்.



































































  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .