2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டுக்குள்ளாகிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

Kanagaraj   / 2013 மார்ச் 03 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்சீத்

கிரான் பிரதேச செயலக பிரிவில் திகிலிவெட்டை பிரதேசத்தில் பாம்பு தீண்டுக்குள்ளான நிலையில் சிறுமி ஒருவர் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சங்கரப்பிள்ளை தாமரைச் செல்வி என்ற 13 வயதான சிறுமியே பாம்புத் தீண்டுதலுக்கு உள்ளானவராவார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த சிறுமி மீது பாம்பு தீண்டியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட மழையுடன் கூடிய காலநிலையை  தொடர்ந்து இந்த பகுதியில் பாம்புகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஐந்து நபர்களை இந்த பகுதியில் நடமாடுகின்ற பாம்புகள் தீண்டியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .