2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மண்முனைத்துறையூடான இயந்திரப்பாதை சேவை ஒப்பந்தத்தில் மாற்றம்

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு, மண்முனைத்துறையூடான இயந்திரப்பாதை சேவையில் ஏற்பட்ட சிக்கல்நிலையை தொடர்ந்து  அதனை நடத்திவருபவருக்கான சேவை ஒப்பந்தம் ரத்துச்செய்யப்பட்டு வேறு ஒரு நபருக்கு சேவை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக இயந்திரப்பாதை சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் அது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, சிரேஷ்ட பொறியியலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசென்றார்.

இதனைத்தொடர்ந்து இயந்திரப்பாதையை நடத்திவருபவருக்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்துச்செய்யப்பட்டதுடன் இன்று திங்கட்கிழமை முதல் புதிய ஒப்பந்தகாரரிடம் சேவை ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை முதல் இயந்திரப்பாதைச்சேவை சீரடையும் எனவும் பிரசாந்தன் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .