2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தமிழரசு கட்சியின் மட்டு. மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக சேயோன் தெரிவு

Super User   / 2013 மார்ச் 04 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக எஸ்.சேயோன் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த வருட இறுதி வரை இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் இணைத் தலைவர்களே காணப்பட்டனர்.

பூபாலன் மற்றும் செயோன் ஆகியோரே இணைத்தலைவர்களாக பதவி வகித்தனர். எனினும் இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் நேற்றைய கூட்டத்தில் தலைவராக ஒருவரே இருக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து புதிய தலைவராக சயோன் எகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக இவர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .