2026 மே 04, திங்கட்கிழமை

'இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்'

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மதுபோதையில் சென்ற பொலிஸ் அதிகாரி, இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குறித்த அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் சென்ற பொலிஸ் அதிகாரியினால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், துறைநீலாவணை பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகேயை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துறைநீலாவனை ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது துறைநீலாவணை காவலரணில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி  இளைஞரை தாக்கியதுடன் அவரது துவிச்சக்கரவண்டியையும் குறித்த பொலிஸ் அதிகாரி பறித்துச்சென்றுள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞன் சுகயீனம் அடைந்த நிலையில்; பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

இந்நிலையில், இச்சம்பம்பவம்; தொடர்பில் துறைநீலாவணை பிரதேச பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிபொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகேவை சந்தித்து குறித்த அதிகாரி மீது நடவடிக்கையெடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகேவை தொடர்புகொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .