2026 மே 04, திங்கட்கிழமை

'பெண் தொழிலாளர்களுக்கு கௌரவத்துடனான வாழ்வு' தொனிபொருளில் மகளீர் தின நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், சுக்ரி

'பெண் தொழிலாளர்களுக்கு கௌரவத்துடனான வாழ்வு' என்ற தொனிப் பொருளில் சர்வதேச மகளீர் தின நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிகப்படவுள்ள நிலையில் அது குறித்து நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசாரபற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் மேலும் தெரிவித்தார்.

'வருமானக் குறைவே குடும்பத் தலைவிகள் நாட்டைவிட்டு தொழிலுக்குச் செல்வதற்கான காரணமாகிறது. எனவே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், பெண்களுக்கு உரிய கௌரவமும் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் 'பெண் தொழிலாளர்களுக்கு கௌரவத்துடனான வாழ்வு' என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசாரபற்ற நிறுவனங்களின் இணையம் இவ் வருடம் சர்வதேச மகளீர் தினத்தை அனுஷ்டிக்கிறது' எனவும் இணையத்தின் தலைவர் கமலதாஸ் தெரிவித்தார்.

'சர்வதேச மகளீர்; தினத்தன்று இணையத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு அங்கத்துவ நிறுவனமும் தத்தமது அலுவலகங்கள் அமைந்துள்ள பிரதேச செயலக வாசல்களில்; அல்லது தத்தம் அலுவலக வாசல்களில் பெண்களின் உரிமைகளை கோரும் வகையிலான அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

இதேவேளை, வீதி போக்குவரத்தை தடைசெய்யாத வகையில் வீதியோரமாக நண்பகல் ஒருமணித்தியாலம் வரை பெண்களும் ஆண்களுமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர'; என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .