2026 மே 04, திங்கட்கிழமை

சிறந்த சேவையை வழங்கும் உள்ளூராட்சி சபைகள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.சுக்ரி


'உள்ளூராட்சி மகுடம்' என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி ஊழியர்கள் மற்றும் சிறந்த சேவையை வழங்கும் உள்ளூராட்சி சபைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

சிறந்த சேவையை வழங்கும் உள்ளூராட்சி ஊழியர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளை கௌரவிக்கும் வகையில இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றிய காரியாலய ஊழியர்கள், அலுவலக சிற்றூழியர்கள், காவலாளிகள், சாரதிகள், வீதித்தொழிலாளிகள், சுகாதார தொழிலாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆறு தொகுதிகளைக்கொண்டதாக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த செயற்பாட்டினை செய்த உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், செயலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மொகமட் சிப்லி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .