2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 05 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூரில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னுக்கும் பின்னுக்குமாகச் சென்றுகொண்டிருந்த 2 ரிப்பர் ரக வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பின்னால் சென்ற ரிப்பர் ரக  வாகனத்தின் சாரதியும்; அதன் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரிப்பர் வாகனத்திற்குள் அகப்பட்ட உதவியாளரை பெரும் சிரமத்திற்கு மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .