2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாநகரசபை ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 05 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் உரிய காலத்தில் வழங்கப்படாமை குறித்து நடவடிக்கை எடுக்கு மாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கே.தவராசா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள், உத்தியோகஸ்தர்கள், மேற்பார்வையாளர்களின் சம்பளம் குறைக்கப்பட்டமை தொடர்பாகவும், தரங்கள், பதவி உயர்வுகள் குறித்து அரசாங்கத்தினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக, தங்களுக்கும், அரச அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர், ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.

அதனால் நம்பியிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் நம் அரசாங்கத்தினால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமே என்று மனம் கலங்கி நிற்கின்றனர்.
நானும் ஒரு அரச கட்சிக்காரனாக இருந்து மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளேன். அதனால் ஒரு விடயத்தினைச் சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் உள்ளுராட்சி உத்தியோகத்தர்களுமு; தமிழ் ண்துசியக் கூடு;டமைப்பின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களே தவிர, அரசாங்க சுற்று நிருபங்களுக்கோ, அரசுக்கோ கட்டுப்பட்டவலர்கள் அல்ல என்பதை உணர்வதோடு தங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

எமது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில், எமது கட்சிக்காகவும், எனது வெற்றிக்காகவும், தோளோடு தோள் நின்று உழைத்த மட்டக்களப்பு மாநகர ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போதனை மன வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன்.

பதவிக்காலம் முடிந்தாலும், விசேட குழு ஒன்றை நியமித்து மட்டக்களப்பு மாநகர ஊழியர்களின் சம்பளப்பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட விடயங்களிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .