2026 மே 04, திங்கட்கிழமை

பொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்சப்பட வேண்டும்: பஷீர்

Menaka Mookandi   / 2013 மார்ச் 05 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் ஆளும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அச்சப்பட வேண்டும். கலவரப்பட வேண்டும். அது தவிர, முஸ்லிம்களோ தமிழர்களோ அச்சப்படத் தேவையில்லை' என்று உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

'சிங்கள முற்போக்கு சக்திகள், பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த அரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகின்ற, கல்லெறிகின்ற, காடைத்தனம் புரிகின்ற, மத வழிபாடுகளில் தலையீடு செய்கின்ற சிறிய சிங்களப் பெருந்தேசியவாத சக்திகளை நாங்கள் கீழ்ப்படிய வைக்க முடியும்' என்றும் அமைச்சர் கூறினார்.

ஏறாவூர் நகரசபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொதுஜன ஐக்கிய முன்னணி என்கின்ற ஒரு கூட்டிலே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இந்தக் கூட்டு முன்னணி அரசியல் என்பது பல அரசியல்வாதிகளை ஒன்றிணைத்திருக்கின்றது. நீண்ட நெடுங்காலம் எதிரும் புதிருமாக இயங்கி வந்த அரசியல்வாதிகளை ஒரே குடையின் கீழ் இந்தக் கூட்டு முன்னணி இணைத்திருக்கின்றது. இந்த இணைவு மட்டும் போதாது இதற்கும் மேலதிகமாக உரையாட வேண்டும். இந்த ஊரில் மாத்திரமல்ல இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற காலமிது' என்றும் அவர் வலியுறுத்தினார்.

'இலங்கையில் இருக்கின்ற எல்லா முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நான் கடந்த காலங்களில் கடுமையாகப் பாடுபட்டேன். ஏனென்றால் இனிமேல் வருகின்ற அரசியல் என்பது ஒரு வித்தியாசமானதாக இருக்கும்.

நெருக்கடிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்திலே நாங்கள் எங்களுடைய பலத்தை மாத்திரமல்ல ஏனைய சமூகங்களோடு புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் அவர்களுக்குள் நாங்கள் எங்களது நம்பகத் தன்மையை நிலைநிறுத்துவதன் மூலம் ஏனைய சமூகங்கள் எங்களைப்பற்றி அச்சப்படாதிருக்கிக்கின்ற அடிப்படையிலே நாங்கள் செயற்படுகின்ற போதுதான் எதிர்காலத்திலே இந்த நாட்டிலே மேலோங்கி வருகின்ற பெருந்தேசியவாத சக்திகளின் சவால்களை முறியடித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அந்த ஒரே நிழலின் கீழ் வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இல்லாது போனால் எப்போதுமே சச்சரவுகள் நிலவுகின்ற ஒரு இடமாக எமது நாடு மாறி விடும் ஆபத்து இருக்கின்றது. இந்த விடயத்தில் ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருக்கின்றார். சிங்கள மக்களுக்குள் மிகப் பெரும்பான்மையான ஆதரவைப்பெற்ற ஒரு அரசியல் தலைவரினால் தான் சிறுபான்மை மக்களுக்கும் சரியான உரிமையைத் தர முடியும். அவர்களைப் பாதுகாக்கவும் முடியும்' என்றும் பஷீர் குறிப்பிட்டார்.

'இன்று பொது பல சேனா பற்றிய அச்ச உணர்வு முஸ்லிம்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அசைக்க முடியாத ஒற்றுமையில் ஏனைய சமூகங்களுடனான இறுக்கமான பிணைப்பில் இருந்தால் நிச்சயமாக இந்தச் சிறிய அமைப்புக்களினுடைய எதிர்ப்புக்களை இலகுவாக முறியடிக்க முடியும்.

அதற்கு ஒரு முன்முயற்சியாக இந்த மேடையிலே தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பிரதிநிதிகள் ஒன்றிணைத்து இருக்கின்றார்கள். இந்த ஒற்றுமை சிங்களவர்களையும் இணைத்துக்கொண்டு வியாபிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு புதிய சகாப்தம் உருவாக வேண்டும்.

எங்கிருந்தோ ஒரு சக்தி இந்த நாட்டிலே பிரச்சினையை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. இனங்களுக்கிடையில் இருக்கின்ற அமைதியை அவர்கள் சீர்குலைக்க எண்ணுகிறார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு புதிய அரசு மிகவும் உறுதியான ஒன்றாக மாறிவிட்டது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'இந்த அரசு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் கோரிக்கைக்கும் நாட்டு மக்களின் உரிமையை தாரை வார்க்கும் நிலைமையில் இல்லை. பல வெளிநாட்டு சக்திகள் தங்களுடைய கோரிக்கைக்கு இலங்கை அரசு இணங்கி நடக்க வேண்டும் என்று விரும்புகின்றது. தாங்கள் சுட்டு விரல் அசைத்தால் அதற்கு இந்த நாடும் நாட்டுத் தலைமையும் ஆட்டங்காண வேண்டும் என்று வெளிநாட்டுச் சக்திகள் நினைக்கின்றன. பூகோள ரீதியாக தங்களுடைய நலன் சார்ந்து இலங்கை செயற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.

மீண்டும் இலங்கையின் சிறுபான்மை மக்களிலே முக்கியமான ஒரு தரப்பாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கி தாங்கள் நினைத்த காரியத்தைச் சாதித்து விடலாம் என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள்.

பலம் பொருந்திய சிங்கள பௌத்த செயற்பாட்டைச் செய்கின்ற ஒரு அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராகச் சிறிய சிறிய நடவடிக்கைகளைச் செய்வதன் மூலம் மத ரீதியான விடயங்களில் தலையீடுகளைச் செய்வதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரங்களை இலக்கு வைத்து அழிக்க முற்படுவதன் மூலம் முஸ்லிம்களுடைய நாளாந்த வாழ்க்கையில் தலையீடுகளைச் செய்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களுக்குள் ஒரு பிரச்சினையை நிறுவினால் முஸ்லிம் சமூகம் இதற்கு எவ்வாறு பிரதிபலிப்பைச் செலுத்த விரும்புகிறது என்று பார்க்க விரும்புகின்றார்கள்.

அதன் மூலம் இன்று இலங்கை அரசுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவுத் தளத்தைக் குறையச் செய்ய வேண்டும் அதுவும் தவறினால் இன்று அரசோடு இணைந்துள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவை இல்லாமற் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துத்தான் அவர்கள் கல்லெறிகின்றார்கள்.

ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற சக்திகள் இந்த நாட்டிலே புதியதொரு பிரச்சினையின் அலையைத் தோற்றுவிப்பதன் மூலம் இந்த அரசுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவைக் குறைத்து அரசைக் கவிழ்க்கும் சதிநாச சூழ்ச்சி வலை பின்னப்படுகின்றது. முஸ்லிம்கள் தமிழர்கள் யாரும் இந்த அரசாங்கத்தோடு இல்லை என்று காட்ட அவர்கள் முனைகின்றார்கள்.

அரசு சிங்கள ஒற்றைத் தலைமைத்துவமாக மாறக் கூடிய ஆபத்திற்கு சிறுபான்மை இனங்கள் விலகி இடம் விட்டு விட்டால் அது பெரும் ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்பதை சிறுபான்மைச் சமூகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0

  • jesmin Tuesday, 05 March 2013 12:50 PM

    ஆகா ஆட்சி மாற்றத்தை விரும்பும் சக்திகள் என்று புதிய கண்டு பிடிப்பொன்றை அமைச்சர் கண்டுபிடித்துவிட்டார். சபாஸ்... அப்போ பொதுபல சென என்பது யாரோ..??

    Reply : 0       0

    aj Tuesday, 05 March 2013 01:20 PM

    கொடுத்த அமைச்சர் பதவிக்கு எப்படி எல்லாம் பேசவேண்டி இருக்கு. முஸ்லிம் அரசியல் கோமாளிகள் ஆளு ஆளுக்கு போட்டி போட்டுகொண்டு மக்களை காட்டிகொடுத்து கொண்டு சிங்கள அரசுக்கும் பேரினவாதத்துக்கும் ஒட்டு ஊதும் விடையத்தை மிக சரியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். சரி நாங்க அச்சம் இல்லாமல் இருக்கிறோம் நீங்க பதவி இல்லமால் இருக்க முடியுமா?
    பொது பல சென அமைப்பு என்பது இவர்கள் சொல்லுவது போல சிறிய அமைப்பு, சிறிய குழு என்று எல்லாம் நினைத்தால் இவர்களை போல முட்டாள்கள் வேறு யாருமே இல்லை. குண்டா சட்டிக்குள்ள குதிரை ஒட்டாமல் கொஞ்சம் வேற்று மொழி ஊடகத்தையும் அவர்களின் கட்டுரை, சிங்கள மக்களின் கருத்துக்களை பாருங்க. அப்போ புரியும் இது சிறிய குழுவாக இல்லை என்ன என்று.

    Reply : 0       0

    vallarasu Tuesday, 05 March 2013 04:49 PM

    அமைச்சரே உங்கள் தலைவர் தேர்தல் காலங்களில் சொன்னாரே முஸ்லிம்களின் உரிமையை வென்றெடுப்போம் என்று... எங்க ஒங்கோட தலை...

    Reply : 0       0

    Kuruvi Tuesday, 05 March 2013 11:54 PM

    உமது பேச்சை கேட்டால் எனக்கு ஒருவசனம் தான் ஞாபகம் வருகிறது "கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடு ஏறோப்பிளேன் ஓட்டுது என்பானாம்" ( நிட்சயமாக ஏறாவூர் மக்கள் அப்படி இல்லை என நம்புகிறேன்).

    தயவு செய்து உங்களது சுயநலத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாத்தையும் காட்டிக்கொடுக்கவோ அல்லது உமது தலைவருடன் சேர்ந்து விற்று விடாதீர்கள்...!!! நக்குண்டார் நாவிழந்தார்..!!!

    Reply : 0       0

    Basit Ali Wednesday, 06 March 2013 05:27 AM

    அப்போ நீங்க கடந்த மாகாணசபை தேர்தலில் சொன்னதெல்லாம்??

    Reply : 0       0

    SANOOS SAHABDEEN Wednesday, 06 March 2013 05:59 AM

    PAARUDA.... ENKADA PUTHU MAAPPILLAIKU INTHE ARASAANGATHHODA EVALAVU PAASAM... VETKAMAA ILLA???? IVALAVU THOORAM INTHE PIRACHHINA VISVAROOFAM EDUKKA UNGALA POLA MANTHIRI MAARU THAAN KAARANAM... DAMBULLA PIRACHHINA ENDU PAESI VOTE EDUKKA THERIYUM... ANTHE PIRACHHINAYA THEERTHHU VAIKKA THERIYAA... ALLAH IRUKKAN.... UNGALA POLA MANITHARHALUKKU THEERPPU VALANGA.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .