2026 மே 04, திங்கட்கிழமை

விமான படையினரால் மட்டக்களப்பில் புதிய பாடசாலை கட்டிடம் நிர்மாணம்

Super User   / 2013 மார்ச் 06 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


விமான படையினரால் மட்டக்களப்பில் புதிய பாடசாலை கட்டிடமொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. மட்டு. வலையிறவு மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலைக்கே இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பிற்காக வலையிறவு மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலையும் உள்ளீர்க்கப்பட்டது.
இதனாலேயே விமான படையினரால் இந்த பாடசாலைக்கான புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

விமான படையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வின் கமான்டர் அஜித் வெவேகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விமான படையின் சேவா வனிதா அமைப்பின் தலைவி நீலிகா அபேவிக்ரம, மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் கே. சத்தியநாதன் மற்றும் விமான படை அதிகாரி எல்.ரொட்றிக்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகவுள்ள இப்பகுதியின் பாடசாலை உள்ளீர்க்கப்பட்டதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் பாடசாலை இயங்கி வந்தது. இந்நிலையில் இப்பகுதியின் மாணவர்களின் நிலைமை தொடர்பில் விமான படை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனால் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு வகுப்பறைகளைக்கொண்டதாக இந்த பாடசாலை கட்டிடம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .