2026 மே 04, திங்கட்கிழமை

காணிக் கச்சேரி ஊடாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்பொடி சசிகுமார்


காணி ஆணையாளரின் 2008/04 சுற்றுநிரூபத்திற்கு அமைய மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காணிக் கச்சேரி ஊடாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு  காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுணதீவு பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் பிரதேச செயலகக் கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில், மேற்படி சுற்றுநிரூபத்திற்கு அமைய  முதலாம் கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட 30 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்திலேயே இந்த காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கை முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட காணி உத்தியோகஸ்தர் குகதா ஈஸ்பரன், வவுணதீவு பிரதேச குடியேற்ற உத்தியோகஸ்தர் என்.ராஜசேகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் கலைச்செல்வி யோகநாதன், கிராம சேவை உத்தியோகஸ்தர் தட்சணாமூர்த்தி உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .