2026 மே 04, திங்கட்கிழமை

தர்மபுரத்தில் முதலை மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியிலுள்ள தர்மபுரம் கிராமத்தில் முதலையொன்று பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிராமத்திற்குள் புகுந்த முதலையை மடக்கி பிடித்த மக்கள் அதனை மரமொன்றில் கட்டிவைத்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் கிராமசேவகர் ஊடாக வனவிலங்கு காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.

கடந்த மாதமும் இக்கிராமத்தில் புகுந்த முதலையை மக்கள் பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம்  ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .